iMedia

Balamandir Summer Camp Valedictory Function 2022

By - Webteam
07.06.22 11:56 AM

ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் விவேகானந்த பண்பாட்டு மையத்தில் மே 31 -ஆம் நாள் 2022 காலை 9 மணி முதல் 12.15 மணி வரை பாலமந்திர் கோடைக்கால முகாமின் நிறைவு விழா  நடைபெற்றது.


ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்தர் மகராஜ், மடத்தின் மேலாளர் சுவாமி தர்மிஷ்டானந்தர் மற்றும் பல துறவிகள் பங்குபெற்றனர். சுவாமிகள், பெற்றோர்கள், மாணவ மாணவிகள் முன்னிலையில் திருமூவருக்கு ஆரதி நடந்து விழா துவங்கியது. முன்னாள் BPCL தலைவர் எஸ். வரதராஜன் முக்கிய விருந்தினராக பங்கேற்று உரையாற்றினார்.


குழந்தைகள் தாங்கள் பாலமந்திர் முகாமில் கற்றுக் கொண்ட பஜனைப் பாடல்கள், யோகம், சுலோகங்கள் ஒப்புவித்தல், குழு நடனம், சிலம்பாட்டம் போன்றவற்றைச் செய்து காட்டி தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.


குழந்தைகள் மேலும் காளிதேவி, ஸ்ரீசங்கரர், ஸ்ரீராமானுஜர், சைதன்ய மகாபிரபு, ஸ்ரீராமகிருஷ்ணர், தூய அன்னை ஸ்ரீசாரதாதேவி, சுவாமி விவேகானந்தர் ஆகியோர் போன்று வேடமிட்டு வந்ததோடு அவர்களது உபதேசங்களையும் கூறி மகிழ்வித்தனர். பெற்றோர்களும், குழந்தைகளும் கோடை முகாமில் தாங்கள் பெற்ற அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டனர். கோயிலின் நுழைவாயிலில் மாணவ மாணவியர் வரைந்த ஓவியங்களை அறிவிப்புப் பலகையில் அழகாகக் காட்சிப்படுத்தப்படுத்தினர்.

 

பதினைந்து நாட்கள் கொண்ட இந்த முகாமிற்கு ஏற்பாடு செய்து நடத்திய ஆசிரியைகளுக்கும், மாணவ மாணவியருக்கும் ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்த மகராஜ் ஆசியுரை வழங்கினார். மேலும் மகராஜ் அவர்கள் குழந்தைகளின் எல்லா நிகழ்ச்சிகளையும் பாராட்டி பேசினார். இந்தக் கோடைமுகாமில் பங்கேற்ற சுமார் 135 மாணவ மாணவியருக்குப் பரிசுகளையும், சான்றிதழ் களையும் வழங்கினார். வெளிநாட்டிலிருந்தும் பிற மாநிலங்களிலிருந்தும் சில குழந்தைகள் இந்த முகாமில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

On 31st May 2022, Valedictory function of the Balamandir Summer camp was held between 9.00 am and 12.15 pm, at Vivekananda Institute of Human Excellence, Sri Ramakrishna Math, Chennai. Srimat Swami Gautamanandaji Maharaj, Swami Dharmishthananda and other Monastic Members participated in the function. The function started with Arati to Holy Trio in the presence of Swamis, Parents and Students. Sri S. Varadarajan, former Chairman, BPCL, was the Chief Guest for the occasion and addressed the gathering.


The children exhibited their talents gained in the summer camp by means of Bhajans, Yoga, Recitation of Slokas, Group Dance and Silambam. Fancy Dress Parade was conducted by students as Sri Sankara, Sri Ramanuja, Sri Chaitanya Mahaprabhu, Swami Vivekananda, Holy Mother Sri Sarada Devi, Mother Kali and Sri Ramakrishna.


Parents and students shared their experience in the Summer Camp. Drawings drawn by the students were displayed in a separate notice board near the Temple entrance. Srimat Swami Gautamanandaji Maharaj delivered Benedictory Address and blessed the students and the teachers who organized the event within a fortnight. Revered Maharaj expressed his wishes and also appreciated all the cultural programmes performed by the children. Prizes and Participation Certificates were distributed to nearly 135 students who were enrolled in the Summer Camp. 2 students were from abroad and many were from other districts of Tamil Nadu.

Webteam