iMedia

Most Revered Srimat Swami Gautamanandaji Maharaj Elected as 17th President of Ramakrishna Order

By - Webteam
24.04.24 01:02 PM


Swami Gautamanandaji Maharaj was elected the President of the Ramakrishna Math and Ramakrishna Mission at the meeting of the Board of Trustees of the Math and the Governing Body of the Mission held at Belur Math on 24 April 2024. He is the 17th President of the twin organizations. He succeeds Swami Smarananandaji Maharaj who passed away on 26 March 2024.


Swami Gautamanandaji was born in Bengaluru in 1929, though his ancestors were all from Tamil Nadu. In his youth days, he came in contact with Bengaluru branch of the Ramakrishna Order, headed by Swami Yatishwarananda Maharaj (1889–1966). He received Mantra Diksha (spiritual initiation) from Swami Yatishwaranandaji in 1955. The following year, he embraced monastic life by joining New Delhi branch of the Ramakrishna Mission as per the advice of his guru. He spent six years in Delhi centre getting introduced to monastic life and serving in different departments.


He received Brahmacharya vows from Swami Vishuddhanandaji Maharaj (in 1962) and Sannyasa ordination and the name ‘Swami Gautamananda’ (in 1966) from Swami Vireshwaranandaji Maharaj, the 10th President of the Ramakrishna Order.


In 1964, he moved from Delhi to the Mission’s centre in Sohra (formerly Cherrapunjee) and then to the centre in Mumbai. In these two centres he served for about 12 years altogether. Subsequently, he was appointed the head of the Mission’s centre in the remote tribal village Aalo (formerly Along) in Arunachal Pradesh in 1976. He served there for 13 long years bringing the light of education to tribal children. During his leadership, the centre in Aalo attained national stature and reached new heights. 


He became a Trustee of the Ramakrishna Math and a Member of the Governing Body of the Ramakrishna Mission in March 1990. Thereafter, he served brief stints as the head of Raipur and Narainpur centres (in Chhattisgarh) and Saradapitha centre (adjacent to Belur Math). 


From Saradapitha he went on to become the head of Ramakrishna Math, Chennai, in 1995—a responsibility that he shouldered for almost three decades. Under his stewardship, the activities and influence of this important branch expanded significantly. He also lent his support to the starting of new branches of the Math and Mission in places like Puducherry (a union territory), Kadapa & Tirupati (in Andhra Pradesh), Chengam, Thanjavur, Thirumukkudal & Villupuram (in Tamil Nadu), and nurtured scores of unaffiliated centres in Tamil Nadu.


He started his spiritual ministry in 2012 following the authorization given to him by the Trustees to give spiritual initiation to devotees. A few years later, in 2017, he was elected a Vice-President of the Order. 


As a Diksha Guru and Vice-President, he travelled extensively in India and different parts of the world and visited the branches of the Math and Mission and also unaffiliated centres in those places. Through those visits he endeavoured to spread the message of Sri Ramakrishna, Sri Sarada Devi, Swami Vivekananda and Vedanta among a vast number of people and gave Mantra Diksha to many spiritual seekers. He has contributed several articles to various journals of the Ramakrishna Order. His physical fitness, mental alertness and jovial nature even at this advanced age are an inspiration to the younger generation.




ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ண மிஷனின் புதிய தலைவர்

கொல்கத்தா, பேலூர் மடத்தில் 24 ஏப்ரல் 2024 அன்று நடைபெற்ற மடத்தின் அறங்காவலர்கள் குழு மற்றும் மிஷனின் நிர்வாகக் குழு கூட்டத்தில் ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ண மிஷனின் தலைவராக ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்தஜி மகாராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் இரு அமைப்புகளின் 17-ஆவது தலைவர் ஆவார். 26 மார்ச் 2024 அன்று காலமான ஸ்ரீமத் சுவாமி ஸ்மரணானந்தஜி மஹராஜுக்குப் பிறகு அவர் பதவியேற்றார்.

சுவாமிகளது முன்னோர்கள் அனைவரும் தமிழகத்தின் வேலூர் மாவட்டத்திலுள்ள கேத்தாண்டப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள். சுவாமிகள் 1929 - இல் பெங்களூரில் பிறந்தார். அவரது இளமைப் பருவத்தில் ஸ்ரீமத் சுவாமி யதீஸ்வரானந்த மஹராஜ் (1889-1966) தலைவராக இருந்த ராமகிருஷ்ண இயக்கத்தின் பெங்களூரு கிளையுடன் அவர் தொடர்பு கொண்டார். அவர் 1955 - இல் ஸ்ரீமத் சுவாமி யதீஷ்வரானந்தஜியிடம் மந்திர தீட்சை பெற்றார். அடுத்த வருடம் அவர் தனது குருவின் ஆலோசனையின்படி ராமகிருஷ்ண மிஷனின் புது தில்லி மையத்தில் சேர்ந்து துறவற வாழ்க்கையைத் தழுவினார். ஆறு வருடங்கள் டெல்லி மையத்தில் துறவற வாழ்க்கைக்கு அறிமுகமாகி பல்வேறு துறைகளில் பணியாற்றினார்.

1962- இல் ஸ்ரீமத் சுவாமி விசுத்தானந்தஜி மஹராஜிடம் அவர் பிரம்மச்சரிய தீட்சை பெற்றார். 1966 - இல் ராமகிருஷ்ண இயக்கத்தின் 10 - ஆவது தலைவரான ஸ்ரீமத் சுவாமி வீரேஸ்வரானந்த மஹராஜிடமிருந்து சந்நியாச தீட்சையும் சுவாமி கௌதமானந்தர் என்ற துறவற நாமத்தையும் பெற்றார். 

1964 - ஆம் ஆண்டில் அவர் டெல்லியிலிருந்து சோஹ்ராவில் (முன்னர் சிரபுஞ்சி) உள்ள மிஷன் மையத்திற்கும் பிறகு மும்பை மையத்திற்கும் மாற்றலானார். இந்த இரண்டு மையங்களிலும் அவர் சுமார் 12 ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் 1976 - இல் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள தொலைதூர பழங்குடி கிராமமான ஆலோ (முன்னர் அலோங்) மிஷன் மையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். அங்கு பழங்குடியின குழந்தைகளுக்குக் கல்வி தீபத்தை ஏற்றி வைக்கும் வகையில் 13 ஆண்டுகள் பணியாற்றினார். அவரது தலைமையின் போது ஆலோ மையமானது தேசிய அந்தஸ்தை அடைந்ததுடன் புதிய உயரங்களையும் எட்டியது.

சுவாமிகள் மார்ச் 1990 - இல் ராமகிருஷ்ண மடத்தின் அறங்காவலராகவும், ராமகிருஷ்ண மிஷனின் ஆட்சிக்குழு உறுப்பினராகவும் ஆனார். அதன்பிறகு ராய்ப்பூர், சத்தீஸ்கரிலுள்ள நரேன்பூர், பேலூர் மடத்திற்கு அருகிலுள்ள சாரதாபீடம் ஆகிய மையங்களின் தலைவராக சிறிது காலம் பணியாற்றினார்.

1995 - இல் சாரதாபீடத்திலிருந்து சென்னை, ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார். ஏறக்குறைய மூன்று தசாப்தங்களாக அவர் இந்தப் பொறுப்பை வகித்தார். அவரது தலைமையின் கீழ் இந்த முக்கியமான மையத்தின் பணிகளும் செல்வாக்கும் கணிசமாக விரிவடைந்தது. யூனியன் பிரதேசமான புதுச்சேரி, ஆந்திராவில் கடப்பா, திருப்பதி, தமிழ்நாட்டில் செங்கம், தஞ்சாவூர், திருமுக்கூடல், விழுப்புரம் போன்ற இடங்களில் மடம் மற்றும் மிஷனின் புதிய கிளைகளைத் தொடங்குவதற்கும் அவர் தனது ஆதரவை நல்கினார். 

பக்தர்களுக்கு ஆன்மிக தீட்சை வழங்க அறங்காவலர்கள் அளித்த அங்கீகாரத்தைத் தொடர்ந்து 2012 - ஆம் ஆண்டு தனது ஆன்மிகப் பணியைத் தொடங்கினார். சில ஆண்டுகளுக்குப் பிறகு 2017 - இல் அவர் இயக்கத்தின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஒரு தீக்ஷை குருவாகவும், துணைத் தலைவராகவும் அவர் இந்தியாவிலும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் விரிவாகப் பயணம் செய்தார். மேலும் அந்த இடங்களிலுள்ள மடம் மற்றும் மிஷனின் கிளைகள் மற்றும் பிற தனியார் மையங்களுக்கும் விஜயம் செய்தார். அந்த வருகைகள் மூலம் அவர் ஸ்ரீராமகிருஷ்ணர், தூய அன்னை ஸ்ரீசாரதாதேவி, சுவாமி விவேகானந்தர் மற்றும் வேதாந்தத்தின் செய்திகளை ஏராளமான மக்களிடையே பரப்பலானார். பல ஆன்மிக அன்பர்களுக்கு மந்திர தீட்சையும் வழங்கினார். ராமகிருஷ்ண இயக்கத்தின் பல்வேறு இதழ்களுக்கு பல கட்டுரைகளை வழங்கியுள்ளார். 

இந்த முதிர்ந்த வயதிலும் (96) அவரது உடல் நலம், விழிப்புணர்வு, நகைச்சுவை உணர்வு ஆகியன இளைய தலைமுறையினருக்கு உத்வேகமாக உள்ளன.
View Images

Webteam