Youth Day Competition 2024 - Prize Distribution Function Invitation

By - Webteam
10.01.24 10:50 AM

அன்புடையீர், வணக்கம்.


சுவாமி விவேகானந்தரின் பிறந்த ஜனவரி 12-ஆம் நாளான தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் நூற்றாண்டு கண்ட முதல் தமிழ் மாதப் பத்திரிகையான ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் பல வருடங்களாக பல்வேறு போட்டிகளை நடத்திக் கொண்டாடி வருகிறது. 2024-ஆம் ஆண்டுக்கான தேசிய இளைஞர் தினத்தையொட்டி ஒரு கட்டுரைப் போட்டியை நடத்தியது. இதில் 160 பள்ளிகள் மற்றும் 30 கல்லூரிகளிலிருந்து சுமார் 8,000 மாணவ-மாணவியரும் இளைஞர்களும் கலந்து கொண்டனர்.


விவேகானந்தர் மனிதவள மேம்பாட்டு மையம் நடத்திய பேச்சு, ஓவியம், விநாடி-வினா போட்டிகளில் 11 பள்ளிகளிலிருந்து 1300 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.


இந்தப் போட்டிகளில் கலந்துகொண்ட மாணவ-மாணவிகளிடம் சுவாமி விவேகானந்தரின் தாக்கமும் அவர் எதிர்பார்த்த பொறுப்புணர்வும் பிரதிபலித்தன. இதன் மூலம் சமுதாயத்திற்கு நன்மை விளைவது நிச்சயம்.


வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் ஜனவரி 12-ஆம் தேதியன்று சென்னை, ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் நடைபெற உள்ள தேசிய இளைஞர் தின விழாவில் வழங்கப்படும். இந்த நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டு சுவாமி விவேகானந்தரின் அருளைப் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.


இறைவன் தொண்டில்

சுவாமி கௌதமானந்தர்,

தலைவர், ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை.


Dear Friends and devotees,

The birthday of Swami Vivekananda which falls on 12th January is celebrated as ‘National Youth Day’ every year. In connection with this, Sri Ramakrishna Vijayam, a Tamil monthly Magazine, is conducting competitions every year. This year 2024, in the Essay Competition conducted by this magazine, around 8000 girls and boys from 160 schools and 30 colleges participated. In other competitions like Oratorical, Drawing and Quiz Programmes conducted by Vivekananda Institute of Human Excellence, around 1300 students from 11 schools participated.

The impact of Swami Vivekananda’s messages and their responsibility is reflected in the Essays written by students and other competitors. The competitions will definitely benefit in bringing awareness among the youth and their social responsibility.

Prizes will be distributed for the winners of the competitors on National Youth Day, the 12th January 2024 at Sri Ramakrishna Math, Chennai.

We shall be glad to have the pleasure of your company and that of your family and friends on this auspicious occasion.

Yours in the Lord,
Swami Gautamananda,
Adhyaksha, Sri Ramakrishna Math, Chennai

Webteam