News Papers Report on Hon'ble Prime Minister Program - 125th Foundation Day Celebration of Sri Ramakrishna Math (Report)

By - Webteam
09.04.23 03:16 PM

The Below article got published in India Express on 9th April 2023


Modi's 5 mantras to make India self-reliant, inclusive
T MURUGANANDHAM @Chennai

PRIME Minister Narendra Modi on Saturday exhorted the 140 crore people of the country to resolve to follow five vital principles - the goal of a devel- oped India, removing traces of colonial mindset, celebrating our heritage, strengthening unity, and focussing on our du- ties to achieve a developed, self-reliant and inclusive India by 2,047. He said this while referring to the message Swami Vivekananda gave in Tamil Nadu decades ago.

"It was in Tamil Nadu that day celebration Swami Vivekananda said Ramakrishna Math something significant for the India of today. He said even assimilating five ideas and living them fully was very powerful. We just celebrated 75 years of in- dependence. The nation has set its sights on making the next 25 years as Amrit Kaal and it can be used to achieve great things by assimilating five ideas the Panch Praan," the Prime Minister said while speaking at the 125th foundation day celebration of the Sri da said Ramakrishna Math here.

Modi also said, "Our governance philosophy is also inspired by Swami Vivekananda." The swami said that whenever privilege is broken and equality is ensured, society progresses. "Today, you can see the same vision in all our flagship programmes. Earlier, even basic facilities were treated like privileges. Many people were denied the fruits of progress. Only a select few or small groups were allowed to access it. But now, the doors of development have been opened to everyone," he added.

Without fail, the Prime Minister hailed the Tamil language and the people of the state and also quoted a verse from Thirukkural in his address. Quoting verse No.213 of Thirukkural which said, "In both this world and the world of the Gods, there is nothing like kindness," the prime minister said Ramakrishna Math has been serving Tamil Nadu in many areas.

The Below article got published in Times of India on 9th April 2023
Modi: Love Tamil language, culture & vibe of Chennai

Earlier, Modi inaugurated the new terminal building of Chennai International Airport, flagged off the Chennai - Coimbatore Vande Bharat Express and took part in the 125th anniversary celebrations of Sri Ramakrishna Mutt at Vivekananda House. Modi left for Mysuru on Saturday night. He is scheduled to reach Masinagudi by a chopper on Sunday to visit Mudumalai Tiger Reserve.

Amid chants of 'Modi, Modi' at Alstom cricket ground in Pallavaram, where the event was held, the PM said India had been witnessing a revolution in infrastructure building, driven by speed and scale. The NDA government had set aside a record 10 lakh crore towards infrastructure in the Union budget, he said.

"This is five times more than that of 2014. The amount set aside for train infrastructure is also an all-time record," Modi said. The length of national highways added per year doubled in comparison with the pre  2014 era. Earlier, 600 route km of rail lines were electrified, while it reaches about 4,000 route km a year today.

The number of medical colleges rose to 660 now from 380 in 2014. "In the last nine years, our country has almost tripled the number of AIIMS. We are the world's number one in digital transactions. We have among the world's most inexpensive mobile data.

Over 6 lakh km of optic fibre has been laid, connecting almost 2 lakh gram panchayats. And today, India has more rural internet users than urban users," the PM said.

Earlier, at the 125th anniversary celebrations of Ramakrishna Math in Mylapore, Modi said "I am among the Tamil people, for whom I have great affection. I love the Tamil language, Tamil culture and the vibe of Chennai. Today, I got the opportunity to visit Vivekananda House. Swami Vivekananda had stayed here after he returned from his famous trip to the West. Meditating here was a special experience."

In his address, chief minister M K Stalin said the country would prosper only when the Union government of diverse, multiethnic and multilingual states continuously implemented the programmes required for the development of the states.

"Perarignar Anna (C N Annadurai) and Muthamizharignar Kalaignar (M Karunanidhi) used to insist that if there was to be true federalism, the states should remain autonomous," he said.

"Since the prime minister was also a chief minister of a state, I think he will also understand my request."

BJP state president K Annamalai was not present at the event while AIADMK general secretary Edappadi K Palaniswami and his rival O Panneerselvam visited the airport to see off Modi.


The Below article got published in The Hindu on 9th April 2023

‘Ramakrishna Math has played an important role in my life’ -  Narendra Modi

The Hindu Bureau 

“Swami Vivekananda had a grand vision of India, and I am sure he is proudly watching India working to fulfill this vision,” Prime Minister Narendra Modi said on Saturday.  


He was speaking at the 125th foundation day celebrations of Sri Ramakrishna Math in Chennai. “Swami Vivekananda’s central message was about faith in ourselves and our country. Many experts are now saying it will be India’s century. Every Indian feels it is our time now, and we engage with the world from the position of confidence and mutual respect,” he said. 


Mr. Modi spoke about Ramakrishna Math, and said that it was an institution he deeply respected. He added that it had played an important role in his life. “I love the Tamil language, Tamil culture, and the vibe of Chennai. Today, I got the opportunity to visit the Vivekananda House where Swami Vivekananda had stayed for a short while. Meditating here was a special experience, and I feel inspired and energetic,” he said. 


He lauded the contribution of Ramakrishna Math and its activities towards philanthropy. “While Ramakrishna Math has had an impact on Tamil Nadu, what came first was the impact that Tamil Nadu had on Swami Vivekananda,” he said, speaking about how Vivekananda discovered his life’s purpose at Kanniyakumari. 


Stressing that the nation had set aside the next 25 years as ‘Amrit Kal’, Mr. Modi said five main ideas could be used to achieve great things. “These are: working towards the goal of developed India, removing traces of colonial mind set, celebrating heritage, strengthening unity, and focussing on our duties. If we collectively and individually resolve to follow these principles, we can build and develop a self-reliant and inclusive India by 2047 and I’m sure we will have Swami Vivekananda’s blessings in this mission.” 

 


ஏப்ரல் 9 2023 , தினமணி இதழில் வெளியானது


வளர்ச்சியின் வாயில்கள் அனைவருக்கும் திறப்பு


சென்னை, ஏப். 8: சுவாமி விவேகானந்தரின் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில், வளர்ச்சியின் வாயில்கள் அனைவருக்கும் திறந்து விடப்பட்டுள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.


சென்னை மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் 125- ஆவது ஆண்டு நிறைவையொட்டி, கடற்கரைச் சாலையில் உள்ள சுவாமி விவேகானந்தர் இல்லத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். சுவாமி தபஸ்யானந்தர் எழுதிய 'திருமூவரின் வாழ்க்கையும் உபதேசங்களும்' என்ற நூலை வெளியிட்டு பிரதமர் பேசியதாவது:


தமிழக மக்கள் மீது மிகுந்த அன்பு கொண்டிருக்கிறேன். தமிழ் கலாசாரம், தமிழ் மொழியை மிகவும் நேசிக்கிறேன். மேற்கு நாடுகளில் பயணத்தை முடித்த பிறகு, சுவாமி விவேகானந்தர் நேராக வந்த இடம் இதுதான். இங்கு தியானம் செய்வது தனித்துவமான அனுபவத்தைத் தரும். பழைமையான நல்ல பல கருத்துகள், நவீன தொழில்நுட்பங்கள் இங்கே இளையதலை முறையினருக்கு கிடைக்கின்றன.


ராமகிருஷ்ண மடம் தமிழகத்தில் கல்வி, நூலகங்கள், நூல் வங்கி, தொழுநோய் விழிப்புணர்வு, சுகாதாரம், ஊரக வளர்ச்சி போன்ற சேவைப் பிரிவுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது.


கன்னியாகுமரியில் புகழ்பெற்று விளங்கக் கூடிய பாறையில்தான் வாழ்க்கையின் நோக்கங்களை உணர்ந்தார் சுவாமி விவேகானந்தர். அவருக்குள் ஏற்பட்ட மாற்றங்களை சிகாகோவில் உணர முடிந்தது. மேற்கில் இருந்து திரும்பிய அவர், தனது பாதத்தை முதலில் பதித்த இடம் தெய்வீக பூமியான தமிழகத்தில்தான்.


சேதுபதி மகாராஜா அவரை மிகுந்த மரியாதையுடன் வரவேற்றார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுவாமி விவேகானந்தர், கதாநாயகன் போன்று தமிழகத்தால் வரவேற்கப்பட்டார். இது இந்திய விடுதலைக்கு முன்பே நிகழ்ந்தது. இது தான் ஒரே பாரதம் உன்னத பாரதத்தின் ஆன்மா. இதே உணர்வுடன் ராமகிருஷ்ண மடம் இந்தியா முழுவதும் ஏராளமான கல்வி நிலையங்களைத் தொடங்கி தன்னலமின்றி பணியாற்றி வருகிறது.


ஒற்றுமைக்கான நிகழ்வுகள்: ஒரே பாரதம் உன்னத பாரதத்தைப் பற்றி பேசும்போது, காசி - தமிழ் சங்கமத்தின் வெற்றியைப் பார்த்தோம். சௌராஷ்டிரா - தமிழ் சங்கமம் நிகழ்ந்து வருவதை கேள்விப்படுகிறேன். இந்தியாவின் ஒற்றுமைக்கான இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து வெற்றிகரமாக நடைபெற வாழ்த்துகள்.

 

எங்களது அரசின் ஆளுமைத் தத்துவம் விவேகானந்தரின் தத்துவத்தில் இருந்தே அமையப் பெற்றுள்ளது. அனைவரும் சமமான வாய்ப்புகள் உறுதி செய்யப்படும்போது, சமுதாயம் வளர்ச்சி பெறும் என்றார் விவேகானந்தர். இந்தத் தொலைநோக்குப்பார்வையே எங்களது திட்டங்களில் இடம்பெற்றுள்ளன.

 

கடந்த காலங்களில் வளர்ச்சியின் பயன்கள் சிலருக்கு மட்டுமே கிடைத்தன. ஆனால், இப்போது வளர்ச்சியின் வாயில்கள் அனைவருக்கும் திறந்துவிடப்பட்டுள்ளன.


முத்ரா யோஜனா எங்களது முக்கிய திட்டங்களில் ஒன்று. இன்று (சனிக்கிழமை) அந்தத் திட்டத்தின் 8-ஆவது ஆண்டு. இந்தத் திட்டத்தின் கீழ் தமிழகத்தின் குறு, சிறு நிறுவனங்கள் பயன்பெற்று வருகின்றன. ரூ.38 கோடி அளவுக்கு பிணையில்லாத கடன்கள் அளிக்கப்படுகின்றன. வணிகத்துக்காக வங்கிக் கடன் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


அடிப்படை வசதிகளான வீடு, மின்சார இணைப்பு, எரிவாயு மின்சார இணைப்பு, கழிப்பறை போன்றவை ஒவ்வொரு குடும்பத்தையும் அடைந்துள்ளன.


இந்தியாவுக்கான மிகப்பெரிய தொலைநோக்குப் பார்வையை சுவாமி விவேகானந்தர் கொண்டிருந்தார். அவரது தொலை நோக்குப் பார்வையை நிறைவேற்றும் வகையில் பணியாற்றி வருகிறோம். இந்த நூற்றாண்டு, இந்தியாவின் நூற்றாண்டு என நிபுணர்கள் உள்பட பலர் கருத்து தெரிவிக் கின்றனர். இது நமக்கான நேரம் என்பதை ஒவ்வொரு இந்தியரும் உணர்கிறார்கள். நம்பிக்கை, இருதரப்பு மரியாதை போன்ற அம்சங்களால் உலக நாடுகளை நாம் அணுகுகிறோம்.


பெண்களின் வாழ்வு உயர... பெண்களுக்கு யாரும் உதவ வேண்டியதில்லை என சுவாமி விவேகானந்தர் அடிக்கடி சொல்வார். அவர்களுக்கு சரியான தளம் கிடைத்து விட்டால், தலைமைப் பண்புடன் பிரச்னைகளை அவர்களே தீர்த்துக் கொள்வார்கள். இந்தியா அதனை நம்புகிறது. பெண்கள் தலைமை தாங்கும்வளர்ச்சியை நாம் நம்புகிறோம். ஸ்டார்ட் அப் இந்தியா, விளையாட்டு, ராணுவம், உயர் கல்வி என எதுவாக இருந்தாலும், தடைகளை உடைத்து பெண்கள் சாதனைகளைப் படைத்து வருகிறார்கள்.


விளையாட்டு, உடல் தகுதியே வளர்ச்சிக்கான முக்கியக் காரணிகள் என விவேகானந்தர் கருதினார். இன்று விளையாட்டு என்பது மற்ற துறைகளைப் போன்று விரும்பி எடுக்கக் கூடிய வாழ்க்கைக்கான பணியாகவே மாறியுள்ளது. கல்வியே அதிகாரத்தைத்தரும் என்றார் விவேகானந்தர். தொழில்நுட்ப கல்வியையும் அவர் விரும்பினார்.


இந்த விருப்பங்களைப் போன்றே, தேசிய கல்விக் கொள்கையை கொண்டு வந்துள்ளோம். சர்வதேச அளவிலான கல்வி நிலையை அது நமக்குத் தந்துள்ளது. 75-ஆவது ஆண்டு சுதந்திர தினத்தைக் கொண்டாடி வருகிறோம். அடுத்த 25 ஆண்டு காலம் என்பது, சுதந்திரம் அடைந்து நூற்றாண்டை நோக்கும் அமிர்தகாலம்.


இந்த 25 ஆண்டுகளில் பாரம்பரியத்தைக் கொண்டாடுவது, ஒற்றுமையை வலுப்படுத்துவது, கடமைகளில் முழுக்கவனம் செலுத்துவது உள்பட 5 முக்கியக் கொள்கைகளை 140 கோடி மக்களும் பின்பற்றி வளர்ந்த நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும். 2047-ஆம் ஆண்டில் தற்சார்புமிக்க வளர்ந்த நாடாக இந்தியாவை மாற்றுவோம் என்றார் பிரதமர்.


சுவாமி விவேகானந்தர் இல்லத்தை பிரதமர் மோடி பார்வையிட்டார். விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் மெய்நிகர் படக் காட்சியையும் பார்வையிட்டார்.


முன்னதாக, ஸ்ரீராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ண மிஷன் துணைத் தலைவர் சுவாமி கௌதமானந்தர் வரவேற்றார்.


ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மூத்த துறவி சுவாமி முக்திதானந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

You can edit text on your website by double clicking on a text box on your website. Alternatively, when you select a text box a settings menu will appear. your website by double clicking on a text box on your website. Alternatively, when you select a text box.

ஏப்ரல் 9 2023 , தினமலர்  இதழில் வெளியானது


நனவாகி வருகிறது விவேகானந்தரின் கனவு 

பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

சென்னை ஏப். 9-

 

"சுவாமி விவேகானந்தர், பெண்கள் முன்னேற்றத்தை வலியுறுத்தினார். இன்று பெண்கள் அனைத்து துறைகளிலும், தடைகளை உடைத்து சாதனை புரிந்து வருகின்றனர்,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

 

சென்னை, மெரினாகடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில், நேற்று ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின், 125ம் ஆண்டு விழா நடந்தது. சிறப்பு விருந்தினராக, பிரதமர் பங்கேற்றார். அங்கிருந்த விவேகானந்தர் சிலைக்கு, மலர் துாவி மரியாதை செலுத்தினார். சிறிது நேரம் தியானம் செய்தார்.

 

விழாவில், புனித மூவர் என்ற நுாலை வெளியிட்டு, அவர் பேசியதாவது:

 

ராமகிருஷ்ண மடம் மீது மரியாதை வைத்துள்ளேன். ஏனெனில், என் வாழ்க்கையில் ராமகிருஷ்ண மடம் முக்கிய பங்கு வகித்துள்ளது. இந்நிறுவனம் சென்னையில் துவக்கப்பட்டு, 125வது  ஆண்டு விழாவை கொண்டாடுகிறது.

 

இது, என் மகிழ்ச்சிக்கு மற்றொரு காரணம்.

 

தமிழ் மக்களை நேசிக்கிறேன். அதேபோல், தமிழ் மொழி, தமிழ் கலாசாரம், சென்னையின் உத்வேகம், எனக்கு பிடித்தமானது.

இன்று விவேகானந்தர் இல்லம் வரும் வாய்ப்பு கிடைத்தது பெரும் பாக்கியம். சுவாமி விவேகானந்தர், இங்கு தங்கி தியானம் செய்துள்ளார்; ஆன்மிக அனுபவம் பெற்றுள்ளார்.

 

ராமகிருஷ்ண மடம், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கல்வி நிறுவனங்கள், நுாலகம், புத்தகவங்கி வைத்துள்ளது. சுகாதாரம், நர்சிங், ஊரகமேம்பாடு என, சேவை செய்து வருகிறது.

 

கன்னியாகுமரியில் புகழ் பெற்ற பாறை உள்ளது. சுவாமி விவேகானந்தர், அந்த பாறையில் அமர்ந்து தியானம் செய்தார். சுவாமி விவேகானந்தர் வாழ்க்கையில், அது மாற்றத்தை ஏற்படுத்தியது. சிகாகோ செல்வதற்கு முன், அங்கு தியானம் செய்தார்.

 

சிகாகோவில் இருந்து, அவர் திரும்பிய போது, தன் புனித பாதத்தை முதலில் தமிழகத்தில் பதித்தார். ராமநாதபுரம் அரசர் வரவேற்று, மரியாதை அளித்தார். அவர் சென்னை வந்த போது, ஒரு வாரம் மக்கள் திருவிழாவாகக் கொண்டாடினர்.

 

சுவாமி விவேகானந்தர் வங்கத்தில் பிறந்தவர். ஆனால்,தமிழகத்தில் ஹீரோவாக பார்க்கப்பட்டார்.

 

'ஒரே பாரதம்; உன்னத பாரதம்’ என்ற உணர்வுக்கு சான்றாக ராமகிருஷ்ண மடம் நாடு முழுவதும் பல்வேறு நிறுவனங்களை துவங்கி, மக்களுக்கு தன்னலமின்றி சேவை செய்கிறது. 'காசி தமிழ் சங்கமம்'  நிகழ்ச்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

 

தற்போது, 'சவுராஷ்டிரா தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சி நடக்கிறது. இந்திய ஒற்றுமைக்கு எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் வாழ்த்துகள்.

 

கடந்த ஆட்சியில், ஏழைகளுக்கு அடிப்படை வசதிகள் கூட அளிக்கப்படவில்லை. தற்போது அனைவருக்கும் அடிப்படை வசதிகள் கிடைக்கச் செய்துள்ளோம். தற்போது வளர்ச்சிக்கான அனைத்து கதவுகளும், அனைவருக்கும் திறக்கப்பட்டுள்ளன.

 

புகழ்பெற்ற திட்டமான ‘முத்ரா யோஜனா’ எட்டாம் ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது. இத்திட்டத்தில், தமிழகம் அதிகம் பயனடைந்த மாநிலமாகவும், அதிக முனைவோர் உடைய மாநிலமாகவும் திகழ்கிறது.

 

பெண்கள் மற்றும் விளிம்பு நிலையில் உள்ளவர்கள் பயனடைந்துள்ளனர்.

 

வங்கியில் தொழில் துவங்க கடன் பெறுவது சிரமம். தற்போது, அனைவருக்கும் கடன் கிடைக்கிறது. அதேபோல, வீடு, மின்சாரம், 'காஸ்' இணைப்பு, கழிப்பறை என, அனைத்தும் மக்களுக்கும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

சுவாமி விவேகானந்தர், இந்தியா குறித்து சிறப்பான தொலைநோக்கு பார்வை கொண்டிருந்தார். பெண்கள் முன்னேற்றத்தை வலியுறுத்தினார். அவரது கனவை நிறைவேற்றும் வகையில் செயல்படுகிறோம்.

 

விவேகானந்தரின் தத்துவங்கள், நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமானவை. விவேகானந்தரின் கனவு நனவாகும் வகையில், இது இந்தியாவுக்கான காலம்; இந்தியாவுக்கான நுாற்றாண்டு; இது நமக்கான நேரம். தற்போது பெண்கள், சமுதாயத்தை வழிநடத்தி செல்கின்றனர். பிரச்னைகளுக்கு தீர்வு காண்கின்றனர். பெண்கள் வளர்ச்சி அடைந்துள்ளனர்; உயர் கல்வி, விளையாட்டு, தொழில் என அனைத்து துறைகளிலும், பெண்கள் தடைகளை உடைத்து சாதனை படைக்கின்றனர்.

 

இந்தியா வளர்ச்சி அடையும் என, சுவாமி விவேகானந்தர் நம்பினார்; இன்று நடக்கிறது. இந்தியர்கள் அதிகாரம் பெற, உயர்கல்வி அவசியம் என, விவேகானந்தர் கருதினார். இன்று, உலக தரத்திலான கல்வியை, கற்றலை உறுதிப்படுத்தும் வகையில், புதிய தேசிய கொள்கை அமல்படுத்தப் பட்டுள்ளது.

 

இது, கல்வித் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இவ்வாறு பேசினார்.

 

கவர்னர் ரவி, அமைச்சர் தங்கம் தென்னரசு உட்பட பலர் பங்கேற்றனர். ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தின் துணைத் தலைவர் கௌவுதமானந்தாஜி மகராஜ் வரவேற்றார். மடம் சார்பில் பிரதமருக்கு, சுவாமி விவேகானந்தர் சிலை பரிசாக வழங்கப்பட்டது.

 

Webteam