iMedia

Vivekananda Navaratri 2023

By - Webteam
31.01.23 12:38 PM

அன்புடையீர்,

சுவாமி விவேகானந்தர் மேலைநாடுகளில் இந்திய ஆன்மீகத்தின் வெற்றிக்கொடியை நாட்டிவிட்டு 1897 ஜனவரியில் தாயகம் திரும்பிய 125-வது ஆண்டு இது. சென்னையில் தற்போதைய விவேகானந்தர் இல்லத்தில் அவர் 1897 பிப்ரவரி 6 முதல் 14 வரை ஒன்பது நாட்கள் தங்கியதால் அது புனிதம் பெற்றது. இந்த நாட்கள் விவேகானந்தர் நவராத்திரி என்று கொண்டாடப்படுகிறது.


மேலும் சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடம் மக்கள் சேவையில் தனது 125-வது ஆண்டினை எட்டியுள்ளதும் முக்கியத்துவமானது. சுவாமி விவேகானந்தர் தங்கிய அந்தப் புனித நாட்களை நினைவுகூரும் வண்ணம் 6.2.2023 திங்கள் முதல் 14.2.2023. செவ்வாய் வரை பல்வேறு நிகழ்ச்சிகள் விவேகானந்தர் இல்லத்திலும் ஸ்ரீராமகிருஷ்ண மடத்திலும் நடைபெற உள்ளன. அனைவரும் ஒன்பது நாள் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு தெய்வத் திருமூவரின் அருளைப் பெற அன்புடன் அழைக்கிறோம்.


கடவுள் தொண்டில்

சுவாமி கௌதமானந்தர்

தலைவர்


முக்கிய குறிப்பு:

6.2.2023 திங்கள் முதல் 11.2.2023 சனிக்கிழமை வரை நிகழ்ச்சிகள் விவேகானந்தர் இல்லத்தில் உள்ள சகோதரி நிவேதிதை அரங்கில் நடைபெறும்.

12.2.2023 ஞாயிறு முதல் 14.2.2023 செவ்வாய் வரை நிகழ்ச்சிகள் மயிலாப்பூர் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் சுவாமி விவேகானந்தர் நூற்றாண்டு அரங்கில் நடைபெறும்.


Dear Friends,

This year happens to be the 125th year of Swami Vivekananda’s Historic return to India. The historic nine days’ stay of Swami Vivekananda at Vivekananda house from 6th February to 14th February in 1897, is being celebrated every year as “Vivekananda Navaratri”. Another significance of this year is that Sri Ramakrishna Math, Chennai is now in the 125th year of its journey in the service of humanity.

To mark this occasion, this year also, special programmes have been arranged at Vivekananda House and Sri Ramakrishna Math from 6.2.2023 to 14.2.2023.

We cordially invite you all with your family and friends to participate  in all the nine days’ programs and receive the blessings of the Holy Trio.


Yours in the service of Humanity

Swami Gautamananda

Adhyaksha


Please Note :

6.2.2023 Monday to 11.2.2023 Saturday programs will be in Sister Nivedita Hall at Vivekananda House.

12.2.2023 Sunday to 14.2.2023 Tuesday programs will be in Swami Vivekananda Centenary Hall at Sri Ramakrishna Math, Mylapore.

Webteam