iMedia

சிறுகதைப் பட்டறை

By - Webteam
23.06.22 12:02 PM

நூற்றாண்டு கண்ட ஆன்மிக மாத இதழான ஸ்ரீராமகிருஷ்ண விஜயமும், 91 ஆண்டுகளாகத் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கும் இலக்கிய மாத இதழான கலைமகளும் இணைந்து சிறுகதைப் பட்டறை ஒன்றை ஜூலை மாதம் 30 ஆம் தேதி சனிக்கிழமை காலை 9 முதல் பகல் 1 மணி வரை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் நடத்த உள்ளன.


சிறுகதைப் பட்டறையில் கலந்து கொள்ள சிறுகதையாளர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவுக்கான படிவத்தை ஸ்ரீராமகிருஷ்ண மடம் மற்றும் கலைமகள் இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து ஜூலை 15-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.


 சிறுகதை எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்கள் தங்களைப் பற்றிய  தன் விவரக்குறிப்பினைப் படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டுகிறோம். தேர்வு செய்யப்பட்டவர்களுக்குத் தபாலில் அல்லது இ-மெயிலில் விவரங்கள் தெரிவிக்கப்படும். அனுமதி பெற்றவர்கள் மட்டும்தான் கலந்து கொள்ள இயலும். நிகழ்ச்சி பற்றிய முழு விவரம் பின்னர்  தெரிவிக்கப்படும். ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் (srv@chennaimath.org) அல்லது கலைமகள் (kalaimagalpublications@gmail.com) இ-மெயில் முகவரியைத் தொடர்பு கொள்ளுங்கள்.


மேலாளர், ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை.

பி டி டி ராஜன், பதிப்பாளர், கலைமகள் மாத இதழ்.

Webteam