Antaryogam Form 2024

By - Webteam
15.06.24 04:39 PM
சென்னை, ஸ்ரீராமகிருஷ்ண மடம் நடத்தும்
அந்தர்யோகம் - 2024 ஜுலை 31 முதல் ஆகஸ்ட் 4 வரை
இடம்: ஸ்ரீராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை - 4.


அன்புடையீர் வணக்கம்.


இந்த ஆண்டு - 2024, பக்தர்களுக்கான அந்தர்யோகம் ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 4 வரையிலான நாட்களில் நடைபெற உள்ளது.


அந்தர்யோகத்தின் சிறப்பம்சங்கள்: துறவிகளின் சொற்பொழிவுகள், பஜனை, தியானப் பயிற்சி, துறவிகளுடன் பக்தர்களின் கலந்துரையாடல் உலா சங்கீர்த்தனம் தெய்வத் திருமூவரின் வாழ்வும் வாக்கும் பற்றிய புதிர் போட்டி போன்றவை.


இந்த நான்கு நாட்கள் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள விரும்பும் பக்தர்கள் நிகழ்ச்சிகளுக்கும் பிரசாதத்திற்குமாக ரூ.750/- மற்றும் ஆசிரமத்தில் தங்குவதற்கு விரும்புபவர்கள் (மந்திர தீக்ஷை பெற்றிருக்க வேண்டும்) ரூ.900/- செலுத்தித் தங்கள் பெயரை முன்னதாகப் பதிவு செய்து கொள்ளக் கோருகிறோம்.


20 முதல் 70 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே கலந்துகொள்ளலாம். முன்பதிவு செய்த அனைத்து பக்தர்களும் ஜூலை 31, மாலை 4.00 மணியிலிருந்து 6.00 மணிக்குள் மயிலாப்பூர், ஸ்ரீராமகிருஷ்ண மடம்வளாகத்தில் பெயரைப் பதிவு செய்துகொண்டு அடையாள அட்டை பெற்றுக் கொள்ள வேண்டும்.

பக்தர்கள் பக்தியில் நனைந்து குழுவாகச் செயல்பட்டு ஆனந்தம் அடைய இது ஓர் அருமையான வாய்ப்பு. அன்பர்களை அந்தர்யோகத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.


இறைப்பணியில் 

தலைவர்


For Registration Online

Webteam