Dinamani News Report on Chennai Math Publication

By - Webteam
18.01.23 10:49 AM
ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்                                                                                                                                                                                                                                             தினமணி - 17 ஜனவரி 2023 

ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் சார்பில் கடந்த 1901-ஆம் ஆண்டு இப்பதிப்பகம் தொடங்கப்பட் டது. பதிப்பகம் சார்பில் ராமகிருஷ்ண பரமஹம் சர், சாரதா தேவியார், சுவாமி விவேகானந்தர் ஆகியோரது அமுதமொழிகள், அன்பு மொழிகள், வீர மொழிகள் ஆகிய தொகுப்பு நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதுவரையில் 600-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, சம்ஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளில் நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 


ராமகிருஷ்ண பரமஹம்சர் உள்ளிட்டோரது நூல்களைத் தவிர வேதங்கள், உபநிஷத்துகள், இதிகாச புராணங்கள் ஆகியவற்றையும் அனைத்து மொழிகளிலும் பதிப்பகம்  வெளியிட்டுள்ளது. சுவாமி விவேகானந்தரின் 'எனது பாரதம் அமர பாரதம்' எனும் நூலானது அதிக அளவில் விற்பளையாகியுள்ளது. அதற்கடுத்தபாடியாக 'கொழும்புவிலி ருந்து அல்மேரா வரை' எனும் சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுத் தொகுப்பானது அதிக அளவில் விற்பனையாகிவருகிறது. 


சுவாமி விவேகானந்தரின் வீர மொழிகள் 11 தொகுப்புகளாகவும், தமிழ் மண்ணில் சுவாமி விவேகானந்தரின் வீர முழக்கம் எனும் நூலும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இலக்கியத்தில் தி.ஜ சுன்னாதனின் திருக்குள் ஆய்வுரை நூலானது இப்பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. குழந்தைகள் முதல் முதியோர் வரையில் வாங்கிப்பயன்படும் வகையில் ரூ.2 முதலான விலையில் நூல்கள் விற்கப்பட்டு வருகின்றன.


தொடர்த்து 125 ஆண்டுகளாகச் செயல்பட்டுவரும் இப்பதிப்பகம் சார்பில் 'ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்' மாத இதழ் வெளியாகிறது. ஆங்கில இதழான 'வேதாந்த கேசரி' சென்னை ராமகிருஷ்ண மடம் பதிப்பகம் சார்பில் வெளியிடப்படுகிறது. தத்துவ எழுத்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது என்கிறார் பதிப்பக நிர்வாகி சுவாமி நிகிலசைதன்யா.

Webteam