அன்புடையீர், வணக்கம்.
சென்னை ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லத்தின் தற்போதைய செயலரான சுவாமி சத்யஞானானந்தஜி அவர்கள் சென்னை மடத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பதை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
ஸ்ரீமத் சுவாமி ராமகிருஷ்ணானந்தரின் 162-வது ஜெயந்தி தினமான வெள்ளி, 02 ஆகஸ்ட் 2024 நன்னாளில் சுவாமிகள் சென்னை மடத்தின் பொறுப்பை ஏற்றுகொள்ள உள்ளார்.
அன்றைய தினமே சென்னை மடத்தின் தற்போதைய செயல் தலைவர் சுவாமி தர்மிஷ்டானந்தஜி அவர்கள் ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லத்தின் செயலர் பொறுப்பை ஏற்றுகொள்ள உள்ளார்.
இதன் தொடர்பாக, சனிக்கிழமை, 03 ஆகஸ்டு 2024 அன்று பொதுக் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பக்தர்கள், நலம் விரும்பிகள் மடத்துடன் தொடர்புடைய ஏணைய அன்பர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்படி அன்புடன் அழைக்கிறோம்.
சுவாமி ரகுநாயகானந்தர்
மேலாளர்