மெய்யூர் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் அமைந்துள்ள சாரதம்மா பசு ஆலயத்தில் பொங்கல் விழா 16.01.2023 அன்று சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு மெய்யூர் கிராமத்தைச் சார்ந்த திரு.V.K.சக்கரவர்த்தி ரெட்டியார் தலைமை தாங்கினார். அமெரிக்கா பாஸ்டன் நகரத்தில் உள்ள ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி தியாகானந்தாஜி மஹராஜ் இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கோ பூஜை செய்து பொங்கல் வாழ்த்துக்களைக் கூறி அனைவருக்கும் அருளாசி வழங்கினார்.
மேலும் இவ்விழாவில்
திருப்பதி ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி சுக்ரிதானந்தஜி மஹராஜ்,
சென்னை டி நகர் மடத்தைச் சார்ந்த ஸ்ரீமத் சுவாமி சத்யபிரபானந்தஜி மஹராஜ்,
பேளூர் மடத்தைச் சார்ந்த ஸ்ரீமத் சுவாமி தக்ஷஜானந்தாஜி மஹராஜ்,
சென்னை மடத்தின் மேலாளர் ஸ்ரீமத் சுவாமி தர்மிஷ்டானந்தாஜி மஹராஜ்,
விவேகானந்தா இல்லத்தின் ஸ்ரீமத் சுவாமி ரகுநாயகனந்தாஜி மஹராஜ்,
சென்னை மடத்தின் காசாளர் ஸ்ரீமத் சுவாமி பஞ்சவக்ரானந்தஜி மஹராஜ்,
சென்னை மடத்தின் உணவு மற்றும் தோட்டத்தின் பொறுப்பாளர் ஸ்ரீமத் சுவாமி உமாதீஷானந்தஜி மஹராஜ்,
தஞ்சாவூர் மடத்தின் ஸ்ரீமத் சுவாமி மஹாஅக்ஷனந்தஜி மஹராஜ்
மற்றும் பிரம்மச்சாரி மஹராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பொங்கல் வாழ்த்துக்களைக் கூறி அனைவருக்கும் அருளாசி வழங்கினர்.
மேலும் BPCL-ன் முன்னாள் தலைவர் மற்றும் நிவாக இயக்குநர் திரு.எஸ்.வரதராஜன், சென்னை மடத்தின் சட்ட ஆலோசகர் திரு.ஸ்ரீகாந் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர். மேலும் இந்நிகழ்ச்சியில் சுமார் 50க்கும் மேற்பட்ட சென்னை பாலமந்த்திர் பிள்ளைகள் அவர்களுடைய பெற்றோர்கள், தன்னார்வத்தொண்டர்கள், மருத்துவர்கள் மற்றும் மெய்யூர் மடத்தைச்சார்ந்த பாலமந்திர் பிள்ளைகள், பெற்றோர்கள் தன்னார்வத் தொண்டர்கள் பொங்கல் வைத்து பூஜை செய்து வழிபட்டனர். இறுதியாக மெய்யூர் கிராமத்தைச் சார்ந்த திரு.M.K.சீனிவாசன் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.



