அன்புடையீர், வணக்கம்.
சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் 125-ஆவது ஆண்டு வைபவ வேளையில், நூறாண்டு கடந்து தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்ற முதல் தமிழ் ஆன்மிகப் பண்பாட்டு மாத இதழான ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தின் நூறாண்டு நிறைவு விழா 24.03.2023 வெள்ளிக்கிழமை அன்று சென்னை, ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் நடைபெற உள்ளது.
இத்துடன் ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தில் வெளியான சில பிரபலமான தொடர் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூல்களாக வெளியிடப்பட உள்ளன.
அனைவரும் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தெய்வத்திருமூவரின் அருளைப் பெற அன்புடன் அழைக்கிறோம்.
கடவுள் தொண்டில்,
சுவாமி கௌதமானந்தர்
தலைவர்