iMedia

Valedictory Function of Nursing Assistant Batch (2022 - 2023)

By - Webteam
03.08.23 04:47 PM
இலவச நர்சிங் அலிஸ்டெண்ட் பயிற்சி - ஒரு சிறு குறிப்பு

25 ஆண்டுகளுக்கு முன்பாக, 1998-ம் ஆண்டு, கிராமத்து ஏழைப்பெண்களின் வறுமையை போக்கி அவர்கள் தன்னம்பிக்கையுடன் வாழ ஒரு வருட நர்ஸிங் அசிஸ்டண்ட் பயிற்சியை முதன்முதலில் காந்தியடிகள் ஆரம்பித்த தக்கர் பாபா வித்யாலயா நிறுவனத்திலும் Foad ஆரம்பிக்கப்பட்டது. Cross Society யிலும் நமது மடத்தால் மாணவிகள் தொலை தூரங்களிலும் இருந்து ரயிலில் வந்து இப்பயிற்சியை பெற்றுச் சென்றனர்.

பயிற்சி பெற்ற அனைவருக்கும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் (செங்குன்றம், கவரப்பேட்டை, கும்மிடிபூண்டி, திருவள்ளூர்) உள்ள மருத்துவமனை மற்றும் நர்ஸிங் ஹோம்-களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது அப்போதைய மாத சம்பளம் ரூ 2000.

நமது இலவச ட்யூன் சென்டர்களில் +2 படித்த பெண்களும் இப்பயிற்சியை பெற கேட்டதினால் சென்னை செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனைகளில் இப்பயிற்சியை தொடங்கினோம்

ஆரம்பத்தில் 30 மாணவிகளுக்கு இட வசதியுடன் கூடிய பயிற்சி அளித்தோம் சாலை வசதி, பேரூந்து வசதி இல்லாத கிராமப் பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து பயிற்சியளித்து வருகிறோம் இவர்களின் பெற்றோர்கள் பெரும்பாலும் பள்ளி செல்லாத கூலி நெசவாளி மூட்டை தூக்குபவர்கள். தற்போது திருவண்ணாமலை வந்தவாசி, நட்டரம்பள்ளி, செஞ்சி, கும்மிடிபூண்டி. கவரப்பேட்டை, பழவேற்காடு, சோழவரம் திண்டிவனம். திருவள்ளூர், அரக்கோணம், கடலூர், புதுச்சேரி போன்ற பகுதிகளில் உள்ள கிராமப்புற ஏழை மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனர்

நமது பயிற்சி முறையை அறிந்து lions club அங்கத்தினர் 400 மாணவிகளை அனுப்பினர் இதுவரை சுமார் 4000 மாணவிகள் இந்தப் பயிற்சி பெற்று பல்வேறு மருத்துவமனைகள் மற்றும் நர்ஸிங் ஹோம்-களில் செவிலியராக திறம்பட சேவை செய்துவருகின்றனர். அதன்மூலம் தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து வருகின்றனர்

200-க்கும் மேற்பட்ட மாணவிகள் ரூ.20,000-க்கும் மேலாக மாத சம்பளம் பெற்று வருகின்றனர் என்பது பெருமைக்குறியது.

தற்போது பயிற்சிகள் கடலூர். புதுச்சேரி, திருவள்ளூர், செங்குன்றம், சென்னை (சர்வ வித்யா) ஆகிய இடங்களில் வழங்கப்பட்டு வருகிறது. 158 மாணவிகள் பயிற்சிபெற்று வருகின்றனர்.

ஜெய் ராமகிருஷ்ண

Webteam