iMedia

Vivekananda Institute of Human Excellence

By - Webteam
02.06.22 04:45 PM

How it Functions : 

    Vivekananda Institute of Human Excellence functions as an ‘Academy for Human Excellence’ which trains young minds through multi-dimensional and value-assimilated programs to achieve excellence and to adopt a healthy, holistic, and culturally enriched lifestyle. The Institute primarily intends to create a generation with excellence as its characteristic feature. To achieve this, regular camps, conventions, weekly and weekend intense training sessions are conducted for parents, youth, volunteers, corporate and government employees to instill in them some core values resulting in a meaningful and purposeful life.

மையம் எவ்வாறு செயல்படுகிறது : 

    பல்வேறு பரிமாணங்கள் கொண்ட, நல்ல கருத்துகள் ஒருங்கிணைக்கப்பட்ட திட்டங்கள் மூலம் ஒரு ஆரோக்கியமான, முழுமையான, சிறந்த கலாச்சாரம் தழுவிய வாழ்க்கை முறையை இளைஞர்கள் மனதில் பதிய வைத்து வழி நடத்திச் செல்லும் மனிதவள மேம்பாட்டு கல்விக் கூடமாக," இந்த மனிதவள மேம்பாட்டு மையம் செயல்படும். பண்பாட்டில் சிறந்த ஒரு தலைமுறையை உருவாக்குவதே இந்தக் கல்விக் கூடத்தின் முதன்மை நோக்கமாகும். ஒரு அர்த்தமுள்ள, பயனுள்ள வாழ்க்கை முறையின் அடிப்படைக் கொள்கைகளைப் பெற்றோர்கள், இளைஞர்கள், தன்னார்வத் தொண்டர்கள், அரசு மற்றும் அரசு சாரா பெரு நிறுவனங்களின் ஊழியர்கள் ஆகியோர் பெற்று பயனடையும் விதமாக, முகாம்கள், மாநாடு, வாரம் மற்றும் வார இறுதி நாட்களில் தீவிரப் பயிற்சி முகாம்கள் நடத்தப்படும்.


What you learn - மையம் கற்றுக் கொடுக்கப்போவது

 Learn Bhajans and Classical Chanting : 

Cultural enrichment through training in Vedic chanting, Tyagaraja Kirtanas, Thiruppavai, Thiruvasagam etc.,. They are the treasure of our heritage and culture. Chanting and singing removes all negativity in our mind and fills our heart with joy. They help in calming the brain so that heart can open itself to the heavenly, permitting us to taste our blissful nature.


 பஜனை மற்றும் பாரம்பரிய மந்திரங்கள் பாராயணம் : 

வேத பாராயணம், தியாகராஜ கீர்த்தனைகள், திருப்பாவை, திருவாசகம் போன்றவை கற்றுக் கொடுக்கப்படும். இவை நமது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் கருவூலமாகும். இவற்றைப் பாராயணம் செய்வது மூலமும், பாடுவது மூலமும், ஒருவருடைய மனதில் படிந்துள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து, இதயத்தில் மகிழ்ச்சி ஏற்படும். இவை மனதையும், மூளையையும் அமைதி படுத்தவும் உதவும். எனவே இறைவனை நோக்கி நம் எண்ணங்களைச் செலுத்தலாம். நமது உண்மை சொரூபமாகிய இறைப் பேரானந்தத்தை அடைய இவை வழிவகுக்கும். இதுவே கலாச்சார பண்பாட்டிற்கும் உயர்வுக்கும் வழிவகுக்கும்.


 Spoken Sanskrit : 

Providing students a taste of a living language—Sanskrit, and acquainting them with its semantic and syntactic tools for deeper understanding and usage of the language in their daily life. It also offers them a rich literary legacy that delves them further to enhance their language learning skills. 


 சம்ஸ்கிருத மொழி (பேசுவதற்கு) : 

சம்ஸ்கிருதம் நமது தொண்மையான மொழி. இந்த மொழியின் பொருள் சார்ந்த வாக்கியங்களை, பாடங்களை, முறையாக கற்றுக் கொண்டால், அது ஒருவரின் தினசரி வாழக்கையில், அந்த சொற்களைப் பயன் படுத்தவும், வாழ்க்கையின் பரிமாணத்தை ஆழமாக புரிந்துகொள்ளவும், ஒரு கருவியாக அமையும். மேலும் ஒரு மொழியை கசடற கற்றுக் கொள்ள ஏதுவாக சம்ஸ்கிருத மொழி வளமான இலக்கிய மரபினை கொண்டுள்ளது. இத்தகைய வளமான தொன்மையான சம்ஸ்ருத மொழியை மாணவர்களுக்கு கற்பிப்பது மையத்தின் நோக்கம்.


 Vivekananda Youth Forum (On Sundays) : 

Youth is the period when the three powers—creativity, self-esteem and instincts develop most in an individual. Success comes to those who Channelise these powers efficiently and develops one’s self-consciousness to the maximum. Men aged between 15 to 35 years are eligible to join this forum that helps them to achieve these powers. 


 விவேகானந்தர் இளைஞர் வட்டம் (ஞாயிற்றுக் கிழமைகளில்) : 

ஒருவரது வாழ்க்கையில், கற்பனைத் திறன், சுய தூண்டுதல், சுய மரியாதை ஆகிய மூன்று சக்திகளும் முழு அளவில் வளர்ச்சியடைவது இளமைப் பருவத்தில்தான். இந்த சக்திகளை முறையாக, திறமையாக கையாள்பவர்களே, வெற்றியடைகிறார்கள். மேலும் ஒருவருடைய சுயஉணர்வு முழுமையாக வளர்ச்சி பெறுவதும் இந்தப் பருவத்தில்தான். இந்த சக்திகளை முறையாக பயில இந்த வட்டம் எதுவாகிறது. 15 முதல் 35 வயது வரையிலான ஆண்கள் இந்த வட்டத்தில் சேர தகுதி வாய்ந்தவர்கள்.

 Bala Mandir (Value orientation camp for Children) : 

Bala Mandir is a value orientation and personality development program for children aged between 8 to 13 years (students from classes III to VIII). Bala Mandir is designed to give practical expression to some of the eternal values and noble virtues presented by the great spiritual tradition of India as exemplified and taught by Swami Vivekananda.


 பாலமந்திர்: (சிறுவர்களை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும் மையம்) : 

8 முதல் 13 வயது வரையிலான சிறுவர், சிறுமிகளை ஆளுமைத் திறன் கொண்டவர்களாக வளர்ச்சி பெறச் செய்யக் கூடிய மையம் ‘பால மந்திர் (மூன்று முதல் எட்டு வகுப்பில் உள்ள மாணவர்கள் இதில் சேரலாம்) இந்தியாவின் மிகச் சிறந்த ஆன்மிகப் பாரம்பரியத்தின் அழிவற்ற மற்றும் உன்னதமான நற்பண்புகளை சுவாமி விவேகானந்தர் எடுத்துக்காட்டி கற்பித்தவாறு, வாழ்க்கையில் நடைமுறையில் எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கவும், பயிற்றுவிக்கவும் ஏற்படுத்தப்பட்டதே ‘பால மந்திர் மையம்.

 Seminars for Professionals : 

Corporate and government officials play an important role in the development of nation and society at large. It is essential to instil in them the core values of life as taught by Swami Vivekananda. These seminars enrich their professional excellence.


 அரசு அதிகாரிகள் மற்றும் தொழில் சார்ந்த ஊழியர்களுக்கான கருத்தரங்கு : 

அரசு அதிகாரிகளும், தொழில் சார்ந்த பெரு நிறுவன ஊழியர்களும், ஒரு நாட்டின் முன்னேற்றத்திலும் சமுக முன்னேற்றத்திலும் பெரும் பங்கு வகிக்கிறார்கள். அவர்களிடம் சுவாமி விவேகானந்தர் மேற்கோள் காட்டிய வாழ்க்கையின் முக்கிய அம்சங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகிறது.

 Regular camps for Parents : 

The home is the first school for a child and the parents are its first Gurus. However, this noble ideal lost its identity in modern society. These camps bring home their parental responsibilities and motivates them on the right method of bringing up the children. 


 பெற்றோர்கள் முகாம் : 

ஒரு குழந்தையின் முதற் பள்ளி வீடாகும். பெற்றோர்களே குழந்தையின் முதல் குரு. எனினும் இன்றைய நவீன சமுதாயத்தில் இந்த உன்னதமான கொள்கைகள் அழிந்து

விட்டன. பெற்றோர்களுக்கு அவர்களின் பொறுப்பை எடுத்துக் கூறவும், குழந்தைகளை உரிய நல்ல பாதையில் வழி நடத்திச் செல்ல ஊக்குவிக்கவும், பெற்றோர்களுக்கான முகாம் நடைபெறும்.

 Understanding Sri Ramakrishna, Sarada Devi and Swami Vivekananda : 

What makes us know about them? Is there any relevance of the Holy trio to the present age? To study the lives of the Holy trio and bring enrichment in one’s own life and to know the contribution of these great people in the field of spirituality.


 ஸ்ரீராமகிருஷ்ணர், ஸ்ரீசாரதா தேவி மற்றும் சுவாமி விவேகானந்தர் ஆகியோரை புரிந்துகொள்ளுதல் : 

நாம் ஏன் அவர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்?

தற்காலத்திற்கும் திருமூவருக்கும் என்ன தொடர்பு? ஆன்மிக உலகிற்கு திருமூவர் அளித்த பங்களிப்பும், ஒருவருடைய வாழ்க்கை மேம்படுவதற்கும் திருமூவரின் வாழ்க்கைக் குறிப்புகளை அறிந்து கொள்வது அவசியம்.

 Residential Camp for Rural Youth : 

Recreating the ancient guru-griha-vasa for studies and men of character, where students lived with the preceptor. 3 to 5 day residential camps transform the youth into physically, mentally, and spiritually strong and useful citizens of the country.


 கிராமப்புற இளைஞர்களுக்கு உறைவிட முகாம் : 

பண்டைய காலத்தில் சிஷ்யர்கள் குருகுலவாசம் செய்து உலகியல் அறிவு பெற்றனர். இத்தகைய  பண்டைய மரபை புதுப்பித்தல் அவசியமாகிறது. இவ்வாறு கிராமப்புற இளைஞர்களுக்கு உறைவிட முகாம் 3 முதல் 5 நாட்கள் அமைத்து நல்லவற்றை எடுத்துறைத்தால் அவர்கள் உடல், மனம் மற்றும் ஆன்மிக வலுமை பெற்று நாட்டில் நல்ல குடிமகனாக உருவாகும் வாய்ப்பு பெருகும்.

 Free guidance and help for deserving students for their higher studies : 

Bringing up the studious, talented and deserving students to achieve their higher goals through support rendered by resource faculties.


 மேற்படிப்பிற்கான தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு இலவச வழிகாட்டுதலும் உதவியும் அளித்தல் : 

திறமை வாய்ந்த, ஆர்வமுள்ள, தகுதியுடைய மாணவர்கள் தங்கள் இலக்கை அடைய, உரிய அமைப்புகள் மூலம் உதவி வழங்க ஆவன செய்யப்படும்.

Webteam