விவேகானந்தர் ஒருங்கிணைந்த கிராமப்புற மேம்பாட்டு மையத்தின் அடிக்கல் நாட்டு விழா 16.11.2022 .
ஸ்ரீமத் சுவாமி கெளதமானந்தஜி மகராஜ் அடிக்கல் நாட்டி ஆசியுரை வழங்கினார். விழாவிற்கு மெய்யூர் கிராமத்தை சார்ந்த திரு V.K. சக்கரவர்த்தி ரெட்டியார் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவி திருமதி லாவண்யா சரத்பாபு, துணைத் தலைவி, திருமதி மீனா பிரகாஷ், ஒன்றிய கவுன்சிலர், திருமதி தேன்மொழி ஏழுமலை மற்றும் வார்டு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.
மேலும் HPCL Chennai Retail Region DGM திருமதி ராதிகா, HPCL Chennai Retail Region Manager, திரு வெங்கடேஷ், முன்னாள் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர், BPCL
திரு எஸ். வரதராஜன், Retd. SBI Officer, திரு மோகனகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
இறுதியாக திரு M.K. சீனிவாசன் நன்றியுரை வழங்கினார்.